search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெள்ளப் பெருக்கு"

    பஞ்சாப்பில் தொடர் மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கில் பாதிப்பு அடைந்தோருக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கும் என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார். #PunjabFloods #Modi
    புதுடெல்லி:

    பஞ்சாப் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. தொடர் மழையால் பல ஊர்களில் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் ஆறுகளில் தண்ணீர் அபாய அளவை கடந்து பாய்கிறது. இதையடுத்து, பஞ்சாப்பில் ராணுவம் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது.



    இதற்கிடையே, பஞ்சாப்பில் வெள்ளம் பாதித்த பகுதிகளை முதல் மந்திரி அமரிந்தர் சிங் பார்வையிட்டார். அதன்பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. வெள்ளத்தால் பாதிக் கப்பட்ட மக்களுக்கு அரசு சார்பில் உணவு பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. வெள்ளத்தால் வீடு இழந்தோர் மற்றும் விவசாய நிலங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த கணக்கெடுக்க உத்தரவிட்டுள்ளேன். பாதிப்பு அடைந்தோருக்கு அரசு தேவையான நிவாரணங்களை அளிக்கும் என்றார்.

    இந்நிலையில், பஞ்சாப் முதல்மந்திரி அமரிந்தர் சிங்கிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார். அப்போது வெள்ளப் பெருக்கில் பாதிப்பு அடைந்துள்ள மக்களுக்கும் மாநிலத்துக்கும் தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கும் என உறுதியளித்தார். #PunjabFloods #Modi
    ஐவரி கோஸ்ட் நாட்டின் அபித்ஜான் நகரில் பெய்து வரும் பலத்த மழைக்கு 18 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். #IvoryCoast #Abidjan #Flood
    அபித்ஜான்:  

    மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஐவரிகோஸ்ட் நாட்டில் உள்ள அபித்ஜான் நகரில் தற்போது பலத்த மழை பெய்து வருகிறது.

    இந்த மழைக்கு 50 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். மேலும் பலர் தங்களது வீட்டை இழந்து தத்தளித்து வருகின்றனர். பல பகுதிகளில் சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து கடுமையாக பாதிப்பு அடைந்துள்ளது.

    வெள்ளத்தில் சிக்கியவர்களில் இதுவரை 115 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவர்கள் அரசின் நிவாரண முகாம்க்ளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த வெள்ளத்தில் சிக்கி 18 பேர் பலியாகி உள்ளதாக அரசு இணைய தளங்களில் பதிவிட்டுள்ளனர். #IvoryCoast #Abidjan #Flood
    இடைவிடாது பெய்து வரும் மழை காரணமாக இன்று 5-வது நாளாக ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
    மேட்டுப்பாளையம்:

    நீலகிரி மாவட்டத்தில் பெய்த இடைவிடாத மழை காரணமாக மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணைக்கு நீர்வரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

    பில்லூர் அணையின் மொத்த நீர் மட்ட உயரம் 100 அடி ஆகும். நேற்று காலை 6 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 97 அடியாக இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. நேரம் செல்லச் செல்ல பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கத்தொடங்கியது. காலை 10 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 13 ஆயிரம் தண்ணீர் வரத்தொடங்கியது. அணையின் நீர்மட்ட உயரத்தை ஒரே சீராக வைத்திருக்க அணையில் இருந்து வினாடிக்கு 13 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

    நேற்று மாலை 5 மணிக்கு அணைக்கு 23 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. அந்த தண்ணீர் அப்படியே திறந்து விடப்பட்டது. இன்று காலை 6 மணி நிரவரப்படி அணைக்கு வினாடிக்கு 14 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. தற்போது அணையில் 97 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு வரும் 14 ஆயிரம் கன அடி தண்ணீர் அப்படியே திறந்து விடப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இன்று 5-வது நாளாக ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதே போல் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் கிடுகிடு என உயர்ந்து பவானிசாகர் அணை நீர்த்தேக்கப்பகுதிகள் கடல் போல் காட்சி அளிக்கிறது.

    மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை அடுத்துள்ள காந்த வயலில் பவானிசாகர் அணை நீர்த் தேக்கப்பகுதிகளில் உள்ள வாழைத்தோட்டங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஆயிரக்கணக்கான வாழைகள் தண்ணீரில் மூழ்கி அழுகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்தது. கடந்த 4 நாட்களாக தொடர் மழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். நிலச்சரிவு ஏற்படும் அபாயமும் இருந்தது.

    இந்த நிலையில் தற்போது நீலகிரி மாவட்டத்தில் மழை சற்று குறைந்து உள்ளது. நேற்று இரவு லேசான மழை பெய்தது. இன்று காலை மழை இல்லை. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஊட்டியில் இன்று ரம்யமான சூழல் இருந்து வருகிறது.


    ×